Thursday 13 June 2013

ட்ரை கலர் டிபன் / Tricolor Tiffin


 ட்ரை கலர் டிபன்

ஹாய்!! என்னடா அது ட்ரை கலர் டிபன்னு யோசிச்சிங்களா....  ஆமாங்க மூணு கலர் இருக்க டிபன் ஐட்டம் தான் இது. பச்சை கலர் சிங்குச்சா, வெள்ளை கலர் சிங்குச்சா, சிவப்பு கலர் சிங்குச்சா....ஓக்கே ஓக்கே.... மேட்டருக்கு வருவோம். இன்னிக்கு  கிரீன் தோசை, வைட் சட்னி,ரெட் சட்னி மூனையும் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம். சரி வாங்க  என்ன என்ன தேவைன்னு பார்க்கலாம்.


தேவையான பொருட்கள்:
கிரீன் தோசை செய்ய 

இட்லி அரிசி - 2 கப்
பச்சை பட்டாணி - 1/2 கப் 
கொத்தமல்லி தலை - 1 கட்டு  (அ) 11/2 கப்
இஞ்சி - 1 துண்டு / 1 இன்ச்
பச்சை மிளகாய் - 1
உப்பு - தேவையான அளவு 

வைட் சட்னி 
தேங்காய் துருவல்  - 1/2 கப்
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - 1/2 இன்ச் 
உப்பு - தேவையான அளவு

ரெட் சட்னி 
தக்காளி - 3 மீடியம் சைஸ் 
சின்ன வெங்காயம் - 6 - 7
பூண்டு - 3 பல் 
வர மிளகாய் - 3
கடலை பருப்பு - 1/2 டீஸ்பூன் 
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன் 
கொத்தமல்லி விதை - 1/2 டீஸ்பூன் 
சீரகம் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

தாளிப்பிற்கு:
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 10 இலை
எண்ணெய் - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 பின்ச்

செய்முறை:

முதல்ல தோசைக்கு ரெடி பண்ணிக்கலாம்.
  • முதல் நாள் நைட்டே பட்டாணிய ஊறவச்சுடுங்க. 
  • அடுத்தநாள் காலைல  அரிசிய 2மணி நேரம் ஊறவச்சு, பட்டாணி, அரிசி  ரெண்டையும் ஒன்னாவே சேர்த்து அரைக்கணும்.
  • பாதி அரச்சதுக்கு அப்புறம் சுத்தம் பண்ணி வச்ச கொத்தமல்லி தலை,இஞ்சி,ப.மிளகாய் எல்லாத்தையும்  கூடவே சேர்த்து அரைக்கணும். 
  • தேவையான அளவு தண்ணி, உப்பு  சேர்த்து தோசைக்கு தேவையான பதத்துல மாவு ரெடி பண்ணிக்கணும்.
  • இந்த மாதிரி...



அப்புறம் என்ன தோசை சுட வேண்டியதுதான்.


நான் இங்க வெங்காயம்,கேரட் தூவி இருக்கேன். உங்களுக்கு பிடிச்சா போட்டுகலாம். கிரீன் தோசை ரெடி.....

தோசைக்கு சைடு டிஷ் ரெடி பண்ணலாம்.

வைட் சட்னி ரெடி செய்யலாம்...


  • தேங்காய் துருவல், இஞ்சி,ப.மிளகாய்,உப்பு எல்லாத்தையும் தண்ணி சேர்த்து அரச்சுகணும். அவ்வளவே தான் நிமிசத்துல வைட் சட்னி ரெடி.

சரி இப்போ ரெட் சட்னி எப்படி செய்றதுன்னு பாப்போம். அட நம்ம தக்காளி சட்னி தாங்க... பட் ஒரு விஷயம் இது எங்க வீட்டு ஸ்பெஷல். இதுவரைக்கும் இந்த மெதேட்ல தக்காளி சட்னி வேற யாரும் செஞ்சு பாத்தது இல்ல. ஆனா எங்க வீட்ல அம்மா இப்படி தான் செய்வாங்க.
  • நல்லா பழுத்த  தக்காளிய கழுவி நல்ல துடைச்சுட்டு ஒரு அடி கனமான பாத்திரத்தில் 1 டேபுள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி தக்களிய முழுசா போட்டு வணக்கனும்.


  • இதோ இந்த மாதிரி .... வனக்கும் போது மூடி வச்சுடுங்க, இல்லன தக்காளி வெடிக்கும் போது  எண்ணெய் மேல படும். 
  • அது ரெடி ஆகாரத்துக்குள்ள நாம வறுக்க வேண்டியதை வறுத்து வச்சுக்கலாம். 


  • ஒரு பேன்ல 1/2 ஸ்பூன் எண்ணெய் ஊத்தி பூண்டு, வரமிளகாய்,க.பருப்பு, உ.பருப்பு, தனியாவிதை,சீரகம்,எல்லாத்தையும் சேர்த்து வறுக்கணும்.



  • க.பருப்பு, உ.பருப்பு,கொஞ்சம் சிவந்ததும் வெட்டி வச்ச சின்ன வெங்காயம் சேர்த்து வறுக்கணும்.
  • வெங்காயம் நல்லா வதங்குனதும் அடுப்ப அணச்சுட்டு, நல்லா ஆறவிடனும். தக்காளியும் நல்லா ஆறின பிறகு எல்லாத்தையும் தேவையான அளவு உப்பு, கொஞ்சமா தண்ணி சேர்த்து அரசுகுங்க.
  • 1 டீஸ்பூன் எண்ணைல கடுகு,உளுந்து,கடலை பருப்பு,கருவேப்பிலை, கொஞ்சமா ஒரு பின்ச் பெருங்காயம் சேர்த்து தாளிச்சு ரெண்டு சட்னிளயும் கொட்டி, சுட சுட தோசைக்கு தொட்டுட்டு சாப்பிட்டா ஆஹா என்ன ருசி.... அவ்ளோ நல்ல இருக்கும்... 



என்னங்க உங்க வீட்ல நாளைக்கு ட்ரை கலர் டிபன் தானே...செஞ்சு பாருங்க உங்க கருத்துக்கள எழுதுங்க....


வாங்க சமைக்கலாம்.....
கொத்தமல்லி சட்னி 

ரெசிபி காண  இங்கே  கிளிக்கவும்.

2 comments:

  1. மூணு கலர் டிபன் பத்திச் சொல்லி அழகா செய்முறையும் தந்துட்டீங்க... நாலாவது கலரை மறந்துட்டீங்களே... இந்த டிபனைச் செஞ்சு சாப்பிடப் போற என்னோட கலர் கறுப்பு... ஹி... ஹி...!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !!!

      Delete

Thankyou for visiting and giving comments. Your valuable comments are really appreciated.....