Saturday 15 June 2013

SURUL POORI / சுருள் பூரி

சுருள் பூரி ஒரு சுவையான , கரகரப்பான  இனிப்பு வகை ஆகும் . இதை  இரண்டு வகைகளில் சமைக்கலாம் . ஒன்று பொடித்த சர்க்கரை பொடியை துவி செய்வது , மற்றொன்று சர்க்கரை பாகில் ஊறவைத்து சுவைப்பது . இங்கு நான் இரண்டாவது முறையில் இதை செய்துள்ளேன் .இதில் நான் உணவு கலரை சேர்த்து ஒரு புதிய முறையில் செய்துள்ளேன் . நீங்களும் செய்து பாருங்கள் . உணவு கலரை சேர்க்காமலும் இதை தயார் செய்யலாம் .







தேவையான பொருட்கள் :


மைதா மாவு - 500 கிராம்
பேக்கிங் பவுடர் -1/2 tspn
உப்பு - ஒரு சிட்டிகை
தண்ணீர் - மாவு பிசைய தே. அளவு
எண்ணெய் - பொரிக்க தே .அளவு

அரிசி மாவு கலவை செய்ய :


அரிசி மாவு - 4-5 Tbsp 
நெய் - 4-5 Tbsp 

சர்க்கரை பாகு செய்ய :


சர்க்கரை - 500 கிராம்
தண்ணீர் - 1/2 கப்


செய்முறை: 

அரிசி மாவையும் , நெய்யையும் ஒரு கிண்ணத்தில் போட்டு பேஸ்டாக  கலந்து கொள்ளவும் .



மைதா மாவு , பேகிங் பவுடர் , உப்பு , ஆகியவற்றை ஒன்றாக கலந்து மூன்று பகுதியாக பிரிக்கவும். உணவு கலரை சிறிதளவு தண்ணீருடன் கலந்து கொள்ளவும் , இந்த நீரை தனி தனியாக சேர்த்து மூன்று உருண்டைகளாக
பிசைந்து கொள்ளவும் .






இதனை சம அளவு சிறிய உருண்டைகளாக பிரித்து கொள்ளவும் .

ஒரு சிறிய உருண்டையை  சப்பாத்தி கல்லில் வைத்து சப்பாத்தி போல் தேய்க்கவும் . இதேபோல் அணைத்து உருண்டைகளையும் செய்து கொள்ளவும் .

இப்பொழுது ஒரு கலர் சப்பாத்தியை எடுத்து கொள்ளுங்கள் . அதன் மேல் அரிசி மாவு பேஸ்டை  தடவவும் . அதன் மேல் மற்றொரு கலர் சப்பாத்தியை வைக்கவும் . மீண்டும் பேஸ்டை தடவுங்கள் . மூன்றாவது கலர் சப்பாத்தியை மேலே வெய்யுங்கள் . இதன் மேல் அந்த பேஸ்டை தடவுங்கள்.

இந்த மூன்று சப்பாத்தி அடுக்களையும்  நன்றாக இறுக்கமாக பிடித்து ரோல் செய்யுங்கள் .







இப்பொழுது இந்த ரோலை diamond  ஷேப்பில் கட் செய்யவும். கட் செய்ததை சப்பாத்தி  கல்லில் வெய்து தேய்த்து கொள்ளவும் .

இதை மிதமான சூட்டில்  உள்ள எண்ணையில் பொரித்து கொள்ளவும் .










இப்பொழுது சர்க்கரையை சிறிதளவு தண்ணீர் சேர்த்து பாகு செய்து கொள்ளவும் . 



பொறித்த பூரியை சர்க்கரை பாகில் போட்டு ஒரு நிமிடம் ஊறவைத்து எடுத்து 
சூடாகவோ அல்லது ஆறிய பிறகு பரிமாறவும்.




சுவையான சுருள் பூரி தயார் 



No comments:

Post a Comment

Thankyou for visiting and giving comments. Your valuable comments are really appreciated.....