Friday 28 June 2013

வீட்டிலேயே செய்யலாம் கறிமசாலா தூள்



கறிமசாலா, கரம் மசாலா ரெண்டுமே ஒன்னா? இல்ல வேற வேறயா? வேற வேறன்னா எத எதுல சேர்க்கணும்?அத வீட்டிலேயே செய்யமுடியுமா?மசாலா ஜாஸ்தி சேர்த்தா உடலுக்கு கெடுதல்னு சொல்றாங்களே? ஹைய்யோ என்ன தான் செய்றது? 
கண்டிப்பா இந்த சந்தேகங்கள் உங்களுக்கும் வந்திருக்கும். சரி இப்போ அதுக்கான விளக்கங்கள பார்க்கலாம்.

கறிமசாலாவும்,கரம் மசாலாவும் வேற வேறங்க. கறி மசாலா நான்- வெஜ் க்கு சேர்க்குற மசாலா, கரம் மசாலா வெஜ் க்கு சேர்க்குற மசாலா.
அரைக்காம முழுசா இருக்குற பட்டை, கிராம்பு,சோம்பு,சீரகம்,......போன்ற சமையலுக்கு பயன்படுத்துற மசாலாப் பொருள்களும், கரம் மசாலா அல்லது ஹோல் கரம் மசாலான்னு அழைக்கப்படுவதுன்டு. நாம சாம்பார் பொடிய பெரும்பாலும் உபயோகிக்கறது போல வட இந்தியால, கரம் மசாலாவை பெரும்பாலும் பயன்படுத்துவாங்க.

சரி அடுத்து மசாலா உணவுல சேர்த்தா உடலுக்கு கெடுதல்னு சொல்றாங்களே?

மசாலா இல்லாம சமையல் இல்லங்க. ஏன் நம்ம ஊர் சாம்பார் பொடிய மசாலா பொருள் சேர்த்து தானே செய்றோம்.இந்த கரம் மசாலா மட்டும் ஏன் கெடுதல்னு சொல்றாங்க?

ஏன்னா அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சுன்னு சொல்றது போல அளவுக்கு அதிகமா சேர்க்கும் போது உடலுக்கு கெடுதல் எற்ப்படுது. இந்த கரம்/கறி மசாலவுல சேர்க்குற ஒவ்வொரு பொருளும் மூலிகை வகையை சேர்ந்தது தானே! உதாரணமா மசாலா பால், மசாலா டீ இதெல்லாம் சளி இருக்கும் போது சளியை போக்க நாம குடுக்கிறோம் இல்லையா? அதுல பட்டை, கிராம்பு,மிளகு,பிரியாணி இலை,இஞ்சி போன்ற மசாலா வகைகளை சேர்த்துதானே செய்யறோம். அதனால கவலைப்படாம இதை உணவுல அளவோட சேர்த்தா உடலுக்கு நன்மையே!

முடிந்த அளவு வீட்டிலேயே மசாலாவை தயார் செய்து உபயோகிங்க.ஏன்னா கடைகளில் வாங்கும் பேக்கட் மசாலாவில் பதபடுத்தும் பொருட்கள் சேர்ப்பதனால ஆரோக்கியம் கேள்விக்குறிதான்.வீட்டிலே தயார் செய்யும் மசாலா, உணவுக்கு மிகுந்த வாசனையும், சுவையையும் தரும். சரி விளக்கம் போதுமானதா இருக்கும்னு நம்பறேன்.

அடுத்து அத வீட்டிலேயே எப்படி செய்யறது ? இதோ உங்கள் கேள்விக்கு பதில்!!!
ஒரு முறை மட்டும் உபயோகிக்கும் அளவு குடுத்திருக்கேன்.பயன்படுத்தி பார்த்துட்டு சுவை பிடிச்சு இருந்தா அதக அளவு செய்து வச்சுக்குங்க.இல்லனா உங்களுக்கு ஏற்ற மாறி மசாலா பொருள்களை கூட்டியோ,குறைச்சோ சேர்த்து அரச்சுகுங்க.ஏன்னா ஒவ்வொரு வீட்டுக்கு வீடு சுவை மாறுபடும் இல்லங்களா.

தேவையானவை  
1" இன்ச் பட்டை - 1
கிராம்பு - 10
வர மிளகாய் - 2
தனியாவிதை - 1 டேபுள்ஸ்பூன் 
சோம்பு,சீரகம் - தலா 1 டீஸ்பூன் 
பிரியாணி இலை - 1 சிறிய இலை 
மிளகு - 1/2 டீஸ்பூன் 
பச்சை ஏலக்காய் -2
ஜாதிக்காய் பொடி- 1/4 டீஸ்பூன் 
ஜாதி பத்ரி - 4,5 இதழ்கள் 
அண்ணாசிப்பூ- 2 இதழ்கள் 


செய்முறை 
விளக்க படங்களுடன் கீழே Youtube ல் 

      
                 

மறக்காமல் உங்க கருத்துக்களை எழுதுங்க தோழிகளே !

இந்த நாள் இனிய நாளாக வாழ்த்துக்கள் !!! நன்றி!!! 

No comments:

Post a Comment

Thankyou for visiting and giving comments. Your valuable comments are really appreciated.....